பொய், புரளி, கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், பயமுறுத்தல், பயங்கரவாதம் இந்த செயல்களை தமிழீழத்தில் நிலை நாட்டுவது தான் பிரபாகரனின் கொள்கையாகும். இந்த கொள்கைகளின் அடிப்படையில் தான் பிரபாகனின் போராட்டமும், புலிகள் இயக்கமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
புத்தளம் ஆனமடுவ பகுதியில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பத்திரிகையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். திவயின செய்தித்தாளின் டெரன்ஸ்வனிசிங்க என்னும் பத்திரிகையாளரே இதன்போது காயமடைந்துள்ளார்.
தூத்துக்குடியிலிருந்து தோணிமூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50லட்சம் ரூபா மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டனர் எனத் தமிழகச்செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது நேற்று முன்தினம் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த படையினரில் 7பேர் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் அவர்களி;ல் சிலர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன இந்தத் தாக்குதலில் 4க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளது
போலி அமெரிக்க விசா வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய அமெரிக்க தூதரக விசாரணை அதிகாரிக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 18வருட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாழைச்சேனையிலிருந்து கல்மடு வரையிலான இ.போ.ச பஸ்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்த சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டின் பின்னர் கல்மடு பகுதியூடாக வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு வரைக்கும் இடம்பெற்று வந்த பஸ்சேவை இடைநிறுத்தப்பட்டது. இதனால், இப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திற்கு காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் சில கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 02.05.2008ல் மன்னாருக்கு தொழில்தேடிச் சென்ற நாச்சிக்குடா கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிரமலை சிறீதர் என்பவர் இன்னும் வீடு திரும்பவில்லையென அவரது மனைவி அல்லிமலர் முறையிட்டுள்ளார்.
கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாக காணப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் காலி மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது. யக்கலமுல்ல எல்ல மேல்பிரிவைச் சேர்ந்த தந்தை மகன் ஆகிய இருவருக்கே காலி மேல்நீதிமன்ற நீதவான் சந்திரசேன ராஜபக்ச இன்று மரண தண்டனை விதித்துள்ளார். 2002ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி அதேபகுதியை சேர்ந்த மலவன்ன கேவகே என்பவரை கொலை செய்தமை தொடர்பில் மூவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தைகண்டிய சேனானிகம இராணுவமுகாமில் பயிற்சி பெற்றுவந்த 202வீரர்கள் உணவு விசமாகியதால் சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்றுகாலை உணவை உட்கொண்ட பின்னர் இவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தெகியத்தைகண்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த பூகொடை லுடுகம பகுதியில் 24வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பூகொடைப் பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை வேலைக்குச் சென்ற இந்த இளைஞர் இதுவரை வீடு திரும்பவில்லையென்று பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா அரச அதிபர் நியமனமானது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளதாக தமிழ்க்கூட்டமைப்பு வன்னி எம்.பி எஸ்.விநோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கல் என அவர் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள பன்னிரண்ட இலங்கை மீனவர்கள் இன்று நாட்டுக்கு திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 22ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இவர்களின் இரு படகுகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
வன்னி துணுக்காய் புத்துவெட்டுவான் பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காலி கட்டுப்பெத்த தெப்பிரவௌ பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 29வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞன் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற இனந்தெரியாத இளைஞர் ஒருவர் அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக பொலீஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கட்டுப்பெத்த பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணிடம் பத்து இலட்சம் ரூபா பணத்தை ஆயுதமுனையில் கப்பமாக பெறமுயன்ற புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை படையினர் சுற்றிவளைத்து கைது செய்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40அளவில் இடம்பெற்றுள்ளது.
படையினரின் போர்நடவடிக்கைகள் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவைப்படுகிறது. என உதவி அமைப்பொன்றில் புள்ளவிபரம் தெரிவிக்கிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து அங்கு தங்கியுள்ள நிலையில் இம்மக்களுக்கான உணவு வழங்கல் நெருக்கடி காணப்படுகிறது.
படைநடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து மர நிழல்களின் கீழும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு மன்னார் மறை மாவட்ட ஆயரால் அனுப்பி வைக்கப்பட்ட கூரைவிரிப்புக்ள வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் கட்டிட நிர்மாணத்துறை தொடர்பாக ஜப்பானில் வதிவிடப் பயிற்சிகளை வழங்குவதற்கு ஜப்பான் அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பில் பேச்சு நடத்தவென ஐவர் அடங்கிய ஜப்பானிய து}துக்குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே.ருகுணுகே தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாவற்குடாவில் புலி உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். அழகையா யோகநாதன் என்கிற இவர் புலிகளின் வன்னிப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இவர் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மணலாறு பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களின்போது இரு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 35புலி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். இதேவேளை கிளிநொச்சியிலுள்ள வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது ஆறு படையினர் காயமடைந்துள்ளனர். இதேவேளை 25கிலோ கிறாம் எடைகொண்ட கிளைமோர் குண்டுகள் இரண்டு உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனுக்கும் நெதர்லாந்து தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமுற்பகல் 11.30அளவில் கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் அவசர சந்திப்புக்கு கேட்டதற்கிணங்க இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மனோகணேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
மதவாச்சி வரையிலான ரயில் சேவையை வவுனியா நகர்வரை நீடிப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருவதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினருடனும் ரயில்வே பொது முகாமையாளருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.