Ilakku Headlines

நச்சுப்பழத்தை தவறாக உண்ட 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதி

களுத்துறை, அளுத்கம பகுதியில் திங்கட்கிழமை காலை நச்சுப் பழம் ஒன்றை உட்கொண்ட 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மயக்கமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிம்புட்டு’ என்ற பழமென நினைத்து உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு களுத்துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; அளுத்கம காட்டுப் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி, மணலாறு, முல்லைத்தீவு மோதல்களில் 16 படையினர் காயம்

வன்னியில் ஞாயிற்றுக்கிழமை கடும் மோதல் நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் 16 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, மணலாறு மற்றும் முல்லைத்தீவு பகுதியில் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் காலை 6 மணிக்கு ஆரம்பமான மோதல் மாலை 6 மணிவரை நடைபெற்றுள்ளது. இதில் 10 படையினர் காயமடைந்துள்ளனர். கரலியமோட்டை பகுதியில் மிதிவெடியில் சிக்கி மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

தடைச்சட்டமிருந்தும் பிரிட்டனில் பிரபாகரனுக்காக நிதிசேகரிக்கும் “வெண்புறாக்கள்”

ஐக்கிய இராச்சியத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாகத் தீர்மானிக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சட்ட பூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் போதிலும் லண்டனிலும் மற்றும் முக்கிய நகரப்பகுதிகளிலும் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனுக்காக வேறு உபாயங்களைக் கையாண்டு நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன

வெளிநாட்டில் நடக்குதைய்யா நம்மவரின் கூத்து!! (சுவிஸில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் இது)

வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் முன்னேறிக் கொண்டு போயிற்றாங்கள் அமெரிக்கன் செய்வாய் கண்டத்துக்கு போய் இறங்கிற மாதிரி நம்முடைய தமிழ் ஆக்களும் எங்கேயோ இறங்கீற்றாங்கள் நல்ல முன்னேற்றம் தான். ஆரம்பத்தில் புலம்பெயர் நாடுகளில் கல்யாணவீடு, சாமத்திய வீடு நடந்தால் மணமக்களை அல்லது சாமத்தியப்பட்ட பெண்ணை விழா செய்யும் நடக்கும் மண்டபத்துக்கு வாடகைக்கு கார் பிடிச்சு கொண்டு போவாங்கள். பிறகு சொந்த காரில் கொண்டு போனாங்கள்..

களுத்துறை பிரதான நீதிபதியை அச்சுறுத்திய 9 சந்தேக நபர்கள் சரீரப் பிணையில் விடுதலை

நீதிமன்றக் கடமைகளை முடித்துக் கொண்டு தனது இல்லத்துக்குச் செல்லும் வழியில், களுத்துறை பிரதான நீதிவான் எம்.அநுர செனவிரத்னவை வீதியில் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியதுடன் கடமையிலிருந்த கான்ஸ்டபிள் ஒருவரையும் சிவில் பாதுகாப்பு வீரரையும் தாக்கி அவர்களில் ஒருவரின் துப்பாக்கியையும் பறித்தெடுத்த சந்தேக நபர்களுக்கு எதிராக அரச சட்டவாதி சிரேஷ்ட சட்டத்தரணி குமார் ரத்னம் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரின் சகா மீது துவக்குச்சூடு

படுகாயம்;வாகனம் தீக்கிரை வடமத்தியமாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளரின் நெருங்கிய சகா ஒருவர் புதன்கிழமை நண்பகல் அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். முன்னாள் முதலமைச்சரும் முதலமைச்சர் வேட்பாளருமான பேர்ட்டி பிரேம்லால் திஸநாயக்காவின் நெருங்கிய சகாவான வசலகே என்பவரே எப்பாவெல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

வன்னி மோதலில் 4 இராணுவம், 15 புலிகள் பலி

வன்னியில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் கடும் மோதலில் செவ்வாய்க்கிழமை நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன், 21 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியிலிருந்து அகதிகள் வெளியேறினால் தங்கவைக்க வவுனியாவில் ஏற்பாடுகள்

வன்னியிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வரும்பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியாவுக்கு வரும் அகதிகளை தங்க வைப்பதற்கான இடங்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள், அகதிகளை தங்கவைப்பதற்கான கொட்டகைகளை அமைப்பது தொடர்பான மதிப்பீடுகளையும் மேற்கொண்டனர்.

எந்தவொரு தருணத்திலும் பிரபாகரனை தாக்குவதற்கு விமானப்படையினர் தயார்

விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக தற்போதைய யுத்தத்தில் புதிய யுத்த விமானங்களை (ஜெற்) பயன்படுத்தவும் தாக்குதல் அமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படைத்தளபதி ஏயார் மாஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார். வடக்கே இடம்பெற்று வரும் யுத்தம் குறித்து அவர் கூறுகையில்; விமானப்படையினர் எந்தவொரு தருணத்திலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தாக்கக் கூடும்.

நெல்லியடி, புங்குடுதீவு குடும்பஸ்தர்கள் இருவர் கொழும்பு, வத்தளை பகுதிகளில் கடத்தல்

வடபகுதியைப் பிறப்பிடமாகவும் நீண்ட காலமாக கொழும்பிலும் வத்தளையிலும் வசித்து வந்த இரண்டு குடும்பஸ்தர்கள் வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடமும் வத்தளை, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

நொச்சிகாமத்தில் இளைஞர் சுட்டுக்கொலை

நொச்சிகாமம் துனுகந்தவெல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் வீடொன்றினுள் நுழைந்த ஆயுதக் குழுவொன்றே இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையிலான நீண்டகாலப் பகையே இந்தக் கொலைக்குக் காரணமெனத் தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை காலை மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

வன்னிப்புகைப்படங்களை இஸ்ரேல் “”ஒபெக் செய்மதிப்பிரிவு’ றோ அமைப்புக்கு வழங்கியது

கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடாகிய “”ஸ்ரேற் ரைம்ஸ்’ (State Times) செய்தித்தாள் சார்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் செவ்வி காணப்பட்ட போது பத்திரிகையாளர் ஸ்ரீலங்காவில் தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் பற்றியும் எதிர்பார்க்கப்படக்கூடிய யுத்த விளைவு பற்றியும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய பாதுகாப்பு ஆய்வு அமைப்பாகிய &#

ரஞ்சன் ராமநாயக்கா மீதான தாக்குதலையடுத்து உதவி இன்ஸ்பெக்டர் உட்பட 6 பொலிஸார் இடைநிறுத்தம்

சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க மீதான தாக்குதலையடுத்து, உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட ஆறு பொலிஸார் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை இரத்தினபுரி பலபட்டல பகுதியில் ரஞ்சன் ராமநாயக்கவின் வாகனத் தொடரணி மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரஞ்சன் ராமநாயக்க உட்பட சிலர் படுகாயமடைந்ததுடன் அவர்களது ஏழு வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன.

திருகோணமலையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்களை காணவில்லையென முறையீடு

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமல் போன ஆறு மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி, கடல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். திருகோணமலை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 29 ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற சிலாபம் மகவௌ தொடுவா தெற்கு பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட ஆறு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நான்கு வயது மகனை வெட்டிய தந்தை கைது

நான்கு வயது மகனை பிளேற்றால் வெட்டிக்காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை மாத்தறை நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 33 வயதான இவர் முதலில் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் உள்ளனர் எனவும், இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனையே இவ்வாறு வெட்டியுள்ளார் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டாவது மனைவிக்கும் இவருக்குமிடையில் சில நாட்களாக ஏற்பட்டு வந்த தகராறே இதற்கு காரணமாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லண்டன் கத்திக்குத்து சம்பவத்தில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு

லண்டன் குறொய்டன் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். லண்டன் சம்னர் வீதியில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் கத்திக்குத்துக்கு இலக்காகி கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் இருந்த இளைஞன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாத்தளைக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பல்கலைக்கழக மாணவனை கொளுத்த முயற்சி

எரிகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி மாத்தளை பகுதியில் தனது நண்பர்களுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் ஒருவரை சிலர் தீவைத்து கொளுத்த முற்பட்ட சம்பவமொன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. பலத்த எரிகாயங்களுக்குள்ளான இந்த மாணவன் ஆபத்தான நிலையில் தற்போது கண்டி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவை உடனடியாக இராணுவத்திடம் ஒப்படைக்க பணிப்பு

பணிப்பாளருக்கு அரசு அவசர உத்தரவு வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை உடனடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு வவுனியா ஆஸ்பத்திரி பணிப்பாளருக்கு அரசால் சனிக்கிழமை அவசர பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு படையினருக்கான சிகிச்சைப் பிரிவாக மாற்றப்படுவதுடன் படையினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

பொலநறுவை மாவட்ட எல்லைக்கிராமங்களில் மட்டு. ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

தேர்தல் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளென மொத்தம் 151 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்திருப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளதுடன் ஆகக் கூடுதலான வன்முறை அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆளும் கட்சியில் போட்டியிடும் மங்களம் மாஸ்டர் தலைமையிலான குழுவினர் பொலநறுவை எல்லை கிராமங்களிலுள்ள தமிழ்பேசும் பகுதிகளில் ஜே.வி.பி.

அமுக்க வெடியில் கவச வாகனம் சிக்கியதில் இரு படையினர் பலி; ஒருவர் படுகாயம்

அம்பாறை, வேப்பேரிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் அமுக்கவெடியில் விசேட அதிரடிப்படையினரின் பவள் கவச வாகனம் சிக்கியதில் அதிலிருந்த இரண்டு படையினர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பூநகரி நோக்கி தொடரும் ஷெல் தாக்குதல்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரியின் கிராமங்களான அத்தாய், தம்பிராய், நல்லூர், மரவக்குறிச்சி ஆகிய பகுதிகளை நோக்கி மண்டைதீவு, கிளாலி படைத்தளங்களில் இருந்து கடந்த மூன்று நாட்களாக பகல் இரவு வேளைகளில் படையினரால் கடும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இத்தொடரும் ஷெல் தாக்குதல்களினால் அப்பகுதிகளிலுள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அங்கு எச்சியிருந்த மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கடன் அட்டைமோசடி இளைஞன் கைது

வெளிநாடு ஒன்றில் களவாடப்பட்ட கடன் அட்டையைப் பயன்படுத்தி சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் உள்ள ஒரு தனியார் சுப்பர் மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறித்த கடன் அட்டை களவாடப்பட்டமை சில மாதங்களின் பின்னரே தெரியவந்தது. ஆனால், பணம் தமக்குக் கிடைத்துவிட்டது என குறித்த மார்க்கெட் முகாமையாளர் தெரிவித்தார்.

வீதி விபத்துகளில் ஐவர் உயிரிழப்பு

கட்டுநாயக்கா, மாத்தறை, கொஸ்கொட மற்றும் சிலாபம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமையும் நேற்று முன்தினமும் நடைபெற்ற வீதிவிபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு நீர்கொழும்பு வீதியில் கட்டுநாயக்கா பகுதியில் நேற்றுக் காலை 9 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் வந்த கார் வானொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

கடந்த 6மாதங்களில் 159 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதக்காலப்பகுதியில் சுமார் 159இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதில் 100பேர் ஆண்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சுமார் 59பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது தற்கொலைகள் சாலைவிபத்து கொலைகள் மற்றும் இயற்கை மரணம் என பல்வேறு காரணங்களில் இவர்கள் மரணித்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவிக்கிறது.