Mulaggam Headlines

வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம். இஸ்ஸடீன் கம்பஹாவுக்கு இடம் மாற்றம். வவுனியாவுக்கு அன்றோ அமலவளன் ஆனந்தராஜா நியமனம்

வவுனியா மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய எம்.இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றதையடுத்து, கடந்த ஜுன் மாதம் வவுனியா மாவட்ட நீதிபதியாக எம்.வை.எம்.இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டிருந்தார். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அரச சட்டவாதியாக அமலவளன் பணியாற்றியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறைச்ச்சாலை பஸ் வண்டியை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்

சிறைச்சாலை ஊழியர்கள் மற்றும் சென்ற பஸ்ஸை இலக்கு வைத்து பாகிஸ்தானின் பன்னு நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்று நடத்தப்ப்ட்டுள்ளது.இதில் ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானிய பொலிஸார் தெரிவித்தனர்.

இரு விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் திருகோணமலையில் மீட்பு

படையினரரால் விடுதலைப்புலி உறுப்பினர்களது இரு சடலங்கள திருகோணமலை வேளான் குளம் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் மீட்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் படையினர் மற்றும் விமானபடையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு விஷமானதில் 212 படையினர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தெஹியத்கண்டிய இராணுவ பயிற்சி முகாமைச் சேர்ந்த படையினர் 212 பேர் உணவு விஷமானதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட்ட உணவில் வைக்கப்பட்டிருந்த மீன் விஷமானதால் இவர்கள் நோய் வாய்க்குட்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மயக்கம், வாய்ந்தி, உடம்பு எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட படையினர் உடனடியாக தெஹியத்கண்டிய மற்றும் அதற்கு அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வன்னியில் மேலும் மூவாயிரம் குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் -5000 தற்காலிக கூடாரங்கள் அவசரமாக அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3000 குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் தோன்றியுள்ளது. மோதல்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மத்திய பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர் என்று ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது.

புலிகளின் பிரதான ஆயுதக் களஞ்சியம் அழிப்பு

மன்னார் மாவட்டப் பிரதேசங்களை முற்று முழுதாக புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீளக்கைப்பற்றிய பின்னர் அரச படையினர் தொடர்ந்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களைக்குறிவைத்து தீவிரதாக்குதல்களை மேற்கொண்டவண்ணம் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில் கடந்த 22 ஆம் திகதி அரச விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் புலிகளுக்கு ஆயுத வழங்கல்களை செய்து வரும் பிரதான ஆயுதக்களஞ்சியத் தொடர்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்

கிழமைக்கு ஒரு பணிப்பெண்கள் வீதம் லெபனானில் உயிரிழக்கின்றனர்-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

லெபனானில் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் தமது எஜமானர்களிடம் இருந்து தப்ப முயல்வதுடன் தற்கொலை முற்சிகளில் ஈடுபட முயலவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மட்டகளப்பு காத்தான்குடி நாவற்குடாபகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்

மட்டகளப்பு காத்தான்குடி நாவற்குடாபகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் அவர் மீது துப்பாகி பிரயோகம் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ ஊடக பேச்சாளர் ரஞ்ஜித் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்த வர்த்தகர் அழகையா யோகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துபாய் தீ விபத்தில் 10 இந்தியர்கள் பலி

துபாயில் நடந்த பயங்கர தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில், இந்தியாவைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இந்தியர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.துபாயின் டெய்ரா என்ற இடத்தில் இந்த தீவிபத்து நடந்தது. இரவு முழுவதும் நடந்த மீட்புப் பணியில் 11 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.தீவிபத்து நடந்த இடம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும்.

தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியாவை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணை

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்றுள்ள தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியா பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் கைசாத்திட்டுள்ளார். ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெல் சாகாஷ்விலி, கிளர்சியாளர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து தனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று ரஷ்ய ஜனாதிபதி பி பி சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார்.

குண்டு தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை கொழும்பு கோட்டை பகுதியில் கைப்பற்றிய இராணுவம்

தெற்கில் தாக்குதல் நடத்த வந்த புலிகள் இயக்கப்பயங்கரவாதிகள் விட்டுச்சென்றதெனக் கருதப்படும் குண்டுகள் தயாரிப்புக்குத் தேவையான பொருட்கள், உபகரணங்களை கொழும்பு முக்கிய பகுதியாகிய கோட்டைப்பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி நடவடிக்கை வன்னியில் முற்றாக பாதிப்பு-ஐ.நா. வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் கவலை

வன்னியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அதன் விளைவான மக்களின் இடம்பெயர்வுகள் காரணமாக சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. வின் சிறுவர் பாதுகாப்பு நிதியமான யுனிசெப் கவலை வெளியிட்டுள்ளது.

ஆயுதங்களுடன் காடுகளுக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவல்

அரசபடையினரால் அனைத்துக்கிழக்கு மாகாணப்பிரதேசங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தினரில் ஒரு பகுதியினர் கிழக்கு மாகாண எல்லையோரக்காடுகளுக்குள் ஊடுருவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யால தேசிய வனப்பிரதேசங்கள் உட்பட காட்டுப்பகுதிகளில் பதுங்கியிருந்து விறகுவெட்டுதல், வேட்டையாடுதல், தாவரங்கள் சேகரிப்பு போன்ற ஜீவனோபாய காரணங்களுக்காக காடுகளுக்குள் செல்லும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வ

நின்ற நிலையில் இறந்த இளைஞன்

மரணமடைந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து 3 நாட்களுக்கு நின்ற நிலையில் வைக்கப்பட்டிருந்து அடக்கம் செய்யப்பட்ட விநோத சம்பவம், புயர்ரோ ரிகோவில் இடம்பெற்றுள்ளது. மரணப்படுக்கையிலிருந்தபோது 24 வயதான ஏஞ்ஜெல் பன்தோஜா மெதினா என்ற இந்த இளைஞரால் தெரிவிக்கப்பட்ட இறுதி விருப்பத்திற்கு அமைய, அவரின் சடலம் அவரது தாயாரின் அறையில் நின்ற நிலையில் வைக்கப்பட்டது.

மாகாணசபை தேர்தல்களில் கடமையாற்றவுள்ள அதிகாரிகள் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

வடமத்திய மற்று சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில் கடமையாற்றவுள்ள அதிகாரிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 2100 அதிகாரிகள் தேர்தல் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் பிரதி ஆணையாளர் மகிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்

ஐ.தே.க. வேட்பாளரின் உறவினரின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்

ஐக்கிய தேசிய கட்சி வடமத்திய மாகாண வேட்பாளர் நெயினா ஆப்தீனின் உறவினர் ஒருவரது வீட்டின் மீது கண்மூடித்தனமா துப்பாக்க பிரயோகம் மேற்கொண்ட கும்பலொன்று, வாகனங்கள் இரண்டை தீயிட்டு கொழுத்திச் சென்றுள்ளதாக கஹட்டகஸ்திலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிராபத்து எதுவும் ஏற்படாத நிலையில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும்-ஜனாதிபதி தெரிவிப்பு

விடுதலை புலிகளின் நாட்டை பிளவுபடுத்தும் தனிநாட்டு கோரிக்கை எதிராக இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழுத்தங்களை கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கே விடுதலை புலிகளின் அரசியல் த்லைமை பீடமான கிளிநொச்சியை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லவுள்ளதாக ஜானதிபதி அதில் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

சூழல் பாதுகாப்பு அனுமதி பத்திரம் பெறாத வைதியசாலைகளை மூடுவதற்கு அமைச்சு தீர்மானம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக சூழல் பாதுகாப்பு அனுமதி பத்திரம் பெறாத சகல வைதியசாலைகளையும் மூடுவதற்கு சூழல் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று தெரிவித்துள்ளார்

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ கிழக்கு மாகாண சபையில் தீர்மானம்

வடக்கு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளதாக கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் கொன்ஸ்டபிள் கொட்டாஞ்சேனையில் வெட்டிக் கொலை

கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியிலுள்ள ரட்ணம் மைதானத்திற்கு அருகில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத கும்பலொன்று இவரது கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். குடாநாட்டுக்கு 40 ஆயிரம் பைக்கற் சீமெந்து

சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில், யாழ். மாவட்டத்தில், நிலவும் சீமெந்துத் தட்டுப்பாட்டை போக்குவதற்காக 40 ஆயிரம் சீமெந்துப் பைக்கற்றுகளை ஏற்றிக் கொண்டு கப்பலொன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக் கப்பலில் எடுத்துவரப்பட்டுள்ள சீமெந்து யாழ். மாவட்டத்திலுள்ள 23 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. யாழ்.

யாழ். குடாநாட்டுக்கு 40 ஆயிரம் பைக்கற் சீமெந்து

சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில், யாழ். மாவட்டத்தில், நிலவும் சீமெந்துத் தட்டுப்பாட்டை போக்குவதற்காக 40 ஆயிரம் சீமெந்துப் பைக்கற்றுகளை ஏற்றிக் கொண்டு கப்பலொன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக் கப்பலில் எடுத்துவரப்பட்டுள்ள சீமெந்து யாழ். மாவட்டத்திலுள்ள 23 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. யாழ்.

நான்கு விடுதலைப்புலிகளின் சடலங்கள் ஐ.சி ஆர்.சியிடம் கையளிப்பு

வவினியா வைட்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த வன்னி முன்னரங்கு மோதல்களில் உயிரிழந்த நான்கு விடுதலைப்புலிகளின் சடலங்கள் ஐ.சி ஆர்.சி அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முஷாரப்பின் இராஜினாமா கடிதம் ஏற்பு காபந்து ஜனாதிபதியாக முஹமட் சும்ரோ -அடுத்த கட்டம் குறித்து ஆளுங்கூட்டமைப்பு ஆராய்வு

பதவி விலகிய பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் இராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை தான் பதவி விலகுவதாக தொலைக்காட்சி உரையொன்றின் மூலம் அறிவிப்புச் செய்த முஷாரப் அதற்கு சில மணித்தியாலங்கள் கழித்து தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் பாராளுமன்றம் அந்த இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

தேர்தல் வன்முறைகளுக்கு பொலிஸாரும் துணைபோயுள்ளனர்- பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு

குடிமக்களது வாக்குரிமையினை எவரும் தடை செய்து விட முடியாது. வாக்குரிமையினை தட்டிப்பறிப்பதோ அல்லது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணாக செயற்படுவதோ சட்டவிரோதமானதாகும். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கத்தின் (பஃவ்ரல்) தலைவர் கிங்ஸ்லி ரொட்றிகோ தெரிவித்தார்.