வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதென கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாணசபை கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றபோதே இவ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோதல்கள் இடம்பெறும் கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்க அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது என்று கிழக்கு மாகாணசபை முடிவெடுத்துள்ளது.
