நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். நேற்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நிலை தேறியுள்ளது.
இங்கிலாந்தின் அடுத்த மன்னராக இளவரசர் வில்லியம் பதவியேற்பார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்தான் அடுத்த மன்னராக பதவியேற்பார் என்பது பொதுவான கருத்தாக இருந்து வரும் நிலையில், அவருக்குப் பதில் சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகனான வில்லியம் மன்னராவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கணினிகளில் தகவல்களை திருடி விற்பனை செய்ததாக பிரிட்டனில் வசிக்கும் இந்திய பொறியியலாளரொருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர் 80 இலட்சம் மக்களைப் பற்றிய தகவல்களைத் திருடி ரஷ்யாவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலொன்றிடம் விற்றுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் “சண்டே ஹெரால்ட்’ என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் அதிபாதுகாப்பு பிரதேசங்கள் எனவும் புலிகளின் முக்கிய நிர்வாக நிலையங்களாக மட்டுமன்றி பல்வேறு இரகசிய நிலையங்களும் அமைந்திருந்த பகுதிகள் எனக்கருதப்பட்டதுமான துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பிரதேசங்களையும் கடந்த 22 ஆம் திகதி 57 ஆவது இராணுவ படையினரும் விசேட இராணுவப் படையினரும் இணைந்து வெற்றிகரமா
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளை
விரைவில் வரவிருக்கும் தனது சிலம்பாட்டம் படத்தில் நயனதாரவை கடுமையாகத் தாக்கி வசனம் வைத்திருக்கிறாராம் சிம்பு. நயனும் சிம்புவும் காதலித்ததும், கண்டபடி திட்டிக் கொண்டு பின்னர் பிரிந்ததும் ஊருக்கே தெரிந்த ரகசியம். அதன்பிறகு பல முறை, பல வழிகளில் நயன்தாராவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பினார் சிம்பு. ஆனால் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை நயனதாரா.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது கூடாது. அவருடைய வழக்கறிஞர் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னை விரைவில் விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென நைஜீரியாவைச் சேர்ந்த 84 வயது முதியவரொருவருக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேற்படி நபர் மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென நைஜீரியாவைச் சேர்ந்த 84 வயது முதியவரொருவருக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேற்படி நபர் மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென நைஜீரியாவைச் சேர்ந்த 84 வயது முதியவரொருவருக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேற்படி நபர் மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
சவுதி அரேபியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளின் விரல் ரேகைப் பதிவை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் இறங்கியதும் அவர்களது விரல் ரேகை பதிவு செய்யப்படும். அத்துடன், அவர்களது பெயர், முகவரி, மதம், பணிக்காலம் உட்பட அனைத்து விபரங்களும் உடனடியாகக் கேட்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும்.
ஐக்கிய இராச்சியத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாகத் தீர்மானிக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சட்ட பூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் போதிலும் லண்டனிலும் மற்றும் முக்கிய நகரப்பகுதிகளிலும் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனுக்காக வேறு உபாயங்களைக் கையாண்டு நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலும் இவ்வாறு அண்மையில் புலிகள் இயக்கத்தினரின் வசமிருந்த பிரதேசங்களை அரச படையினர் கைப்பற்றிவிட்ட நிலையிலும் வன்னியில் இதுவரை புலிகள் இயக்கத்தினர் அரசபடையினருடன் மோதலில் ஈடுபட்ட அனைத்துக் களமுனைகளிலும் தோல்வியடைந்து பின்வாங்கிவரும் நிலையிலும் வன்னியில் வாழும் மக்களை குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் வாழும் மக்களை அந்தப் ப
சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் வாபஸ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் சர்தாரி போட்டியிடுவதை எதிர்த்தே நவாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
வெலிமடையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஒன்று கொன்கெட்டிய எனும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் 15பேர் விபத்துக்கு உள்ளாகியதுடன் 7பேர் ஆபத்தான நிலையில் மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது புத்தலைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பஸ்சாரதியும் அவரது மகனும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் ஹெனமுல்லைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8கிலோ கிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த சி-4ரக வெடிப்பொருட்களை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது வெடிப்பொருட்களுடன் டெட்டனேட்டர் கருவியொன்றும் அதற்கு பயன்படுத்தும் வயர்ச்சுருள் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெயின் தலைநகர் மட்றிட்டிலுள்ள பறாஜாஸ் விமானநிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ள நிலையில் விபத்துக்கான காரணத்தை அறியும் முயற்சியில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 25 வருடங்களில் ஸ்பெயினில் ஏற்பட்ட மிகமோசமான விபத்து இதுவாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆசிய அணிகள் எழுச்சி கண்டுள்ளன. சீனா, தென்கொரியா, ஜப்பான் என மூன்று நாடுகள் “முதல் 10′ வரிசையில் இடம்பிடித்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அணிகளுக்கு அதிர்ச்சியளித்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் என்றாலே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அணிகள் தான் சாதிக்கும் என்ற கருத்துக்கு பலமான அடி விழுந்துள்ளது.
சந்தேகத்துக்கிடமான கருச்சிதைவு நிலையமொன்றை நேற்றுமுன்தினம் சுற்றிவளைத்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார் வைத்தியர் தாதி மற்றும் இளம் தம்பதியர் நால்வரை கைதுசெய்துள்ளனர் இந்த கருச்சிதைவுநிலையம் கஹால்ல என்ற இடத்தில் இயங்கிவந்துள்ளது தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்தே இந்த முற்றுகை நடத்தப்பட்டது என்றும் சிலகாலமாகாம இந்தநிலையம் இடம்பெற்று வந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர் கருச்சிதைவு செய்து கொள்ள வருபவர்களிடம் சுமார் 6000 ரூபா வ
வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் அகற்றிவிட வேண்டுமென பொலிஸ் தேர்தல் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டவிதி முறைகளுக்கமையவே இந்ந அறிவிப்பு விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சாம்பிய ஜனாதிபதி லெவி எம்வனவாசா தனது 59 ஆவது வயதில் பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள மருத்துவமனையில் காலமானார். பதில் ஜனாதிபதியாக செயற்படுவாரென எதிர்பார்க்கப்படும் துணை ஜனாதிபதி ரூபையா பண்டா தொலைக்காட்சி மூலம் இதனை அறிவித்துள்ளார். எகிப்தில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் மாரடைப்பால் அவதிப்பட்ட எம்வனவாசா பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டு பரிஸிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சுல்தான் உலகெங்கும் பெரியவர்களின் ரசனை வேண்டுமானால் நாளுக்கு நாள் மாறும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாறுபடலாம். ஆனால் குழந்தைகளின் ரசனைகள் ஒரே மாதிரியானவை. அந்த தைரியம்தான் இன்னும் ஹாரி பாட்டர்களையும், ஸ்பைடர்மேன்களையும், ஜூராஸிக் பார்க்குகளையும் பல பாகங்களாக வெளியிட வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை புதன்கிழமையுடன் இலங்கை இழந்துள்ளது. இலங்கை சார்பில் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க 200 மீற்றர் ஓட்டத்தில் பதக்கமொன்றைப் பெறுவாரென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நிறைவேறவில்லை. நேற்றிரவு நடைபெற்ற 200 மீற்றர் ஓட்ட முதலாவது அரையிறுதிச் சுற்றில் சுசந்திகா ஜெயசிங்க 22.98 செக்கன்களில் ஓடி 7 ஆவது இடத்தையே பெற்று இறுதிச் சுற்றில் பங்கேற்கும் தகுதியை இழந்தார்.