பருத்தித்துறையில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலி

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவ படையினரின் வாகனதை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு படைவீரர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.படுகாயமடைந்த இராணுவ வீரர் பலாலியில் உள்ள இராணுவ மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.