வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையில் ஆண்டாங்குளம் பரப்புக்கடந்தன் பகுதிகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது!

மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இருந்து வன்னிபுலிகளின் பகுதிகளை நோக்கிய படையினரின் முன்னேற்ற நடவடிக்கை தொடர்கின்றது. நேற்று முன்தினம் பெரியமடு மற்றும் 13 சதுர கிலோ மீற்றர் சுற்றளவைக்கொண்ட ஆண்டாங்குளம் பகுதியையும் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் சனிக்கிழமை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது பரப்புக்கடந்தான் பகுதியையும் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.