விமல் வீரவன்சவுடன் நல்லுறவை பேண வேண்டிய கடப்பாடு உள்ளது-முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிப்பு

தேசிய சுந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்களுடன் நல்ல உறவினை பேண வேண்டிய கடப்பாடு தனக்கு உண்டு என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். சந்திரகாந்தன் (பிள்ளையான்) தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை நேற்றுக்காலை சந்தித்து உரையாடிய பின்னர் இதனை தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளர் நந்தன குணதிலக பேச்சாளர் மொகமட் முசாமில், அஞ்சான் உம்மா ஆகியோரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் சமகால அரசியல்நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. (more…)