இந்திய பிரதமர் உட்பட சார்க் மகாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கான பாதுகாப்பை எமது படையினரே வழங்குவர்-பாலித கோஹன!

சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.