ஹெலிகப்டர் மீது தாக்குதல்!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டு பகுதிக்கு மேலாக பதிவாக பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகப்டர் மீது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிதியுதவியில் அம்பாறை அறுகம்குடா பகுதியில் அமையப்பெற்ற பாலத்தினை திறந்து வைப்பதற்கு சென்றிருந்த ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகப்டர் மீதே தாக்குதல் மேற்கொண்டதாக வன்னிபுலிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் ஹெலிகப்டரின் எரிபொருள் [...]