வடமாகாண ஆளுநராக ஒய்வுபெற்று சென்றுள்ள பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள இவ் பதவியை விக்டர் பெரேரா எதிர்வரும் 3ம் திகதி ஏற்றுக்கொள்வார் என்று பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பீ. ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். இலங்கையின் பொலிஸ் வராலாற்றில் முதல் தடவையாக ஒய்வுபெற்றுள்ள பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார்.
