தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) தலைவர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் நாடு திரும்பியுள்ளதாக அவரது கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். போலி கடவுச்சீட்டில் பிரித்தானியாவுக்கு பயணம் செய்தமை தொடர்பாக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கருணா அம்மான் தண்டனைக்காலம் முடிவடைந்து இன்றையதினம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
