சார்க் உச்சிமாநாட்டின் போது இலங்கையில் கடல், வான் பிராந்திய கட்டுப்பாடு இந்தியாவிடம்

அண்மையில் இந்தியாவிலிருந்து இந்திய பாதுகாப்புச் செயலர் ஸ்ரீ. விஜயசிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகிய மூன்று முக்கிய உயர் மட்டப் பதவியிலுள்ளவர்கள் கொண்ட தூதுக்குழு கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ ஆகிய நிறைவேற்று உயர் மட்டத் தலைவர்களுடன்நடத்திய பேச்சுவார்த்தையில் இந்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இனமோதல் சம்பந்தப்பட்ட இறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு உயர்மட்டத்தலைவர்களும் சந்தித்துப் பேசி எடுத்துள்ள தீர்மானங்கள் பற்றி ஸ்ரீலங்கா அரச தரப்பிலிருந்தோ அல்லது இந்தியத்தரப்பிலிருந்தோ, உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அங்கு எடுக்கப்பட்ட அதிமுக்கிய தீர்மானங்கள் பற்றிப் பல்வேறு ஊடகத்தரப்புகளிலிருந்தும் பலவாறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. (more…)