இலங்கையிலிருந்து வேரொவரின் பெயரிலான கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்குள் வருகைதந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கருணா அவர்கள் அந்த தண்டனை முடிந்த நிலையில் இலங்கைக்கு திரும்ப அனுப்பபட்டிருப்பதாக கொழும்பிலுள்ள பிரிதானியா தூதரகத்தின் சார்பிலான பேச்சாளர் டொமினிக் வில்சன் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் நாடு திரும்பியது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஊடக பேச்சாளர் அசாத் மெளலானா தெரிவிக்கையில் ;-இன்று இலங்கைக்கு மீண்டும் திரும்பி எங்களுடன் மாலை 4 மணியளவில் தொலைப்பேசி தொடர்பை ஏற்படுத்தி தான் இலங்கைக்கு வந்துள்ள செய்தியை எங்களுக்கு அறிவித்திருந்தார். இப்பொழுது அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் அவர் எதற்காக திரும்பிவந்திருக்கின்றார். தொலைப்பேசியில் என்ன? பேசினார். அவர் மட்டும் வந்திருக்கின்றாரா? அல்லது மனைவி மற்றும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றாரா? அவர் வருகைக்கு முன்னர் உங்களிடமோ அல்லது அரசாங்கத்திடம் ஏதாவது ஆலோசனைகள் நடத்தப்பட்டதா? என்று அவரிடம் கேட்கப்பட்டகேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் (more…)
