இலங்கையில் மனித உரிமைகள், ஊடகங்கள் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க கவன்ம் செலுத்தியுள்ளது-எவன் பெய்ஜேன்பன்

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாகவும்,ஊடகங்கள் மீதான தாக்குதல் குறித்தும் அமெரிக்கா ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய உதவி செயலாளர் எவன் பெய்ஜேன்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 30ம் திகதி முதல் ஜூலை 1ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த எவன் பெய்ஜென்பன் தாந்து இலங்கைக்கான விஜயத்தின் போது பதில் வெளிவிவகார அமைச்சர் ஹீசெய்ன் பையா,அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளிநாட்டு வேலைவய்ப்புஅமைச்சர்,கெஹெலிய ரம்புக்வெல,பாதுகாப்பு செயலளர் கோதபாய ராஜப்க்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அமெரிக்கா இலங்கையுடன் நீண்டகால உறவினை பேணி வருகிறது இச்சந்திப்பு மூலம் இவ்வுறவுகள் மேலும் பலப்படுத்தப்படுகிறது.அமெரிக்கா இலங்கைக்கு அபிவிருத்தி திட்டங்களிற்கும் கிழக்கும் உட்பட்ட அபிவிருத்தி திட்டங்களிற்கும் தொடர்ந்து உதவிகளை வழங்குமென எவன் பெய்ஜேன்பன் தெரிவித்துள்ளார்.