எறிகணை தாக்குதல்களினால் மல்லாவி துணுக்காய் பிரதேசத்து மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மல்லாவி துணுக்காய் பகுதிகளை நோக்கி இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களினால் இங்கிருந்து பொதுமக்கள் மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 5000 குடும்பங்கள் வரையில் இந்த எறிகணை தாக்குதல்களினால் இடம்பெயர நேரிடலாம் என தெரிவித்துள்ள முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இவர்களையும் ஏற்கனவே மாந்தை கிழக்குப் பிரதேசமாகிய பாண்டியன்குளம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களையும் பராமரித்து, அவர்களுக்கான அவசர நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முடியாத சிக்கலான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். (more…)


Fatal error: Allowed memory size of 33554432 bytes exhausted (tried to allocate 323 bytes) in /home/nerunet/public_html/includes/database.inc on line 200