தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் திணைக்களத்தால் வியாழக்கிழமை அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தல் சட்டம் 1981 இலக்கம் ஐ 7 (4) பிரிவின் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் விதியின் கீழ் இவ்விரு கட்சிகளும் அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க அறிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இவ்விரு கட்சிகளும் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் கட்சிகளாக [...]
