வன்னி செல்ல முடியாமல் பயணிகள் காத்திருப்பு!

வன்னிக்கான தரைவழிப் பாதை (ஏ9) நேற்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது.
இன்றும் நாளையும் வழமை போல் இந்தப் பாதை திறக்கப்படமாட்டாதென்பதால் வன்னிக்கும் வவுனியாவுக்குமிடையே பயணங்களை மேற்கொள்ள முடியாது நூற்றுக்கணக்கான பயணிகள் வன்னியிலும் வவுனியாவிலும் காத்திருக்கின்றனர்.