நெடுந்தீவு கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்த 30 இந்திய மீனவர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து 12 இழுவைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 30 இந்திய மீனவர்கள் புதன்கிழமை மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் அடிக்கடி ஊடுருவி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் புதன்கிழமையும் வழமை போல் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, மாலை 3.40 மணியளவில் அங்கு வந்த கற்டபடையினர் அனைவரையும் மடக்கிப் பிடித்தனர். 12 இழுவைப் படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர் அவற்றிலிருந்த சுமார் 30 மீனவர்களையும் கைது செய்து கரைக்கு கொண்டு வந்தனர். [...]