கிராமிய வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 4 இலட்சத்து 98 ஆயிரத்து 72 ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்த வங்கியின் முன்னாள் முகாமையாளருக்கு வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளியாகக் கண்ட நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருடகால சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தது. நீர்கொழும்பு குரன கிராமிய வங்கியின் முன்னாள் முகாமையாளரான டொலஸ் பெரேரா என்பவருக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 1984 [...]
