வெள்ளைவான் கடத்தலை ஒழிக்க ஒத்துழைக்கவேண்டும்- புதிய பொலிஸ்மா அதிபர்!

இன்று நாட்டில் அதிகமாக விமர்சிக்கப்படும் வெள்ளைவான் கடத்தல்களை முற்றாக ஒழிக்க சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படுமென புதிய பொலிஸ் மா அதிபரான ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று சனிக்கிழமை சென்று வழிபட்ட பொலிஸ் மா அதிபர் கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பௌத்த பீடங்களுக்கு சென்று மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றபின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;