இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த கடும் சண்டையில், 48 விடுதலைப்புலிகள் இறந்தனர். மேலும் முக்கிய முகாமை கைப்பற்றியதாக, ராணுவம் தெரிவித்து இருக்கிறது.இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் தினமும் சண்டை நடந்து வருகிறது. இலங்கையின் வட கிழக்கு பகுதியில் உள்ள முல்லைத்தீவு காட்டுக்குள் ராணுவம் முன்னேறியது. அங்கு ஜானகபுரம் பகுதியில் உள்ள முக்கிய இடமான “மைக்கேல்'’ முகாமை, 3 நாட்கள் நடந்த கடும் சண்டைக்கு [...]
