விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தினம் - பிரபாகரன் அஞ்சலி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைப் பிரிவான கரும்புலிகள் பிரிவின் 21வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் கரும்புலிகள் படையின் முதல் வீரரான காப்டன் மில்லரின் படத்திற்கு பிரபாகரன் மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி உள்ளிட்ட 356 கரும்புலி வீரர்களின் படங்களுக்கு பிரபாரகரனின் மனைவி மதிவதனி பிரபாகரன், விடுதலைப் [...]