புத்தளம் அநுராதபுரம் வீதியில் சிறாம்பியடி காட்டில் மனித எலும்புக்கூடு ஒன்றை சனிக்கிழமை மாலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இப்பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற சிலர் இந்த எலும்புக்கூட்டை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர். பொலிஸார் அங்கு வந்து பார்த்தபோது எலும்புக்கூட்டுக்கு அருகில் பெண்கள் அணியும் பழுதான உடைகளும் காதில் அணியும் தங்கத்தினாலான தோடு ஒன்றையும் கண்டெடுத்தனர். இதனால், இந்த எலும்புக்கூடு பெண் ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். புத்தளம் ஆஸ்பத்திரி சவச்சாலையில் இந்த எலும்புக்கூடு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை [...]
