வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்களை வழங்கும் நடவடிக்கைகள் இன்று நிறைவுபெறவிருப்பதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தற்போது வேட்பாளர்களின் பெயர்களுக்கு அமைய ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ சுமணசிறி தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 23ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 15அரசியல் கட்சிகள், 35சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 1698 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
