உப்புவெளி பகுதியில் 15வயது சிறுவன் கடத்தல்

திருமலை உப்புவெளி பகுதியிலிருந்து 15வயதான சிறுவன் ஒருவன் சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். உப்புவெளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் சுரேஸ்குமார் என்ற சிறுவனே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே இச்சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக பெற்றோரால் உப்புவெளி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 6ம் திகதி காலை 11மணியளவில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது. சிறுவனின் தந்தையும், தாயும் வீட்டில் இல்லாத போதே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது. ஆட்டோவில் வந்த சிலரே இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். சிறுவன் கடத்தப்பட்டமை தொடர்பில் பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.