ஜே.வி.பி எம்.பிக்களான விஜித்த ஹேரத் மற்றும் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் இரகசிய பொலீஸ் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கனகசபை தேவதாசன் தொடர்பாகவே இரு எம்.பிக்களும் விசாரிக்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டு பொலீசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேவதாசன் எவ்வாறு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பாகவும் இவருடன் உள்ள தொடர்புகள் தொடர்பாகவுமே இரகசியப் பொலீசாரினால் விசாரிக்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
