சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க

சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசாங்கம் இப்போதும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளது. எனினும் புலிகள்தான் அதற்கான சமிக்ஞையை முதலில் தெரியப்படுத்த வேண்டும். புலிகள் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தையில் உண்மையான நம்பிக்கை [...]