புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊர்காவற் படைவீரர் ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் புலி ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வழங்கிய தகவலொன்றையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது கைது செய்யப்பட்ட ஊர்காவற் படைவீரர் வழங்கிய தகவலையடுத்தே மேற்படி ஊர்காவல் படைவீரர் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளமை விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலதிக விசாரணைகளை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
