வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட மட்ட அரசியல் பிரதிநிதிகளுடனும் தேர்தல் செயலக மற்றும் பொலீஸ் அதிகாரிகளுடனும் பெப்ரல் அமைப்பு சந்திப்புக்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இச்சந்திப்புக்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலநறுவை மாவட்டத்தில் ஆரம்பமாகவிருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்ரிகோ நேற்றுத் தெரிவித்துள்ளார். மாவட்ட மட்ட உதவி தேர்தல் ஆணையாளர், பொலீஸ் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆகியோருடன் தனித்தனியாக தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்படுமெனவும் அவர் கூறினார். இந்த அடிப்படையிலான சந்திப்பு நாளை 9;ம் திகதி அநுராதபுரம் மாவட்டத்திலும் அடுத்தவாரம் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் அநுராதபுரம் மாவட்டத்தில் இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் அபேட்சகர்களுடன் தேர்தல் கால வன்முறைகளை தவிர்ப்பது குறித்து நாளை கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.