தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி என்ற அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அதில் தானும் போட்டியிடுவதாகவும் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாஅம்மான், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது கட்சிக்;கு ஆதரவளித்த மக்கள் பொதுத் தேர்தலிலும் ஒத்துழைப்பு வழங்குவர் என்று தெரிவித்துள்ளார். கட்சிக்குள் முரண்பாடு என்று ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் போன்று எந்த முரண்பாடும் இல்லை. வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் தமிழ் மக்கள் [...]
