செய்திகள்

ஒரு கோடி ரூபா சட்டவிரோத சிகரெட்டுகள் கல்முனைப்பகுதியில் கைப்பற்றப்பட்டன

கல்முனை நீலாவனை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நீலாவனை பொலிஸ் சோதனை நிலையத்திலேயே கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த லொறியொன்றை வழிமறித்த பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது அந்தலொறிக்குள்ளிருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 3,500 பண்டல் வெளிநாட்டு சிகரெட் வகைகளைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து லொறிச் சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடிக் குற்றச்சாட்டில் ஜயவர்த்தன பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது.

பல்கலைக்கழக அனுமதிக்காக போலி ஆவனங்களைச் சமர்பிந்திருந்த 05 மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெய்டி பள்ளிக்கூடம் இடிந்ததில் 90 பேர் பலி

ஹெய்டி தலைநகர் போர்ட் ஒ பிரென்ஸின் புறநகர்ப் பகுதியில் ஒரு பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை உயிருடன் மீட்க பெரும் விளக்குகளின் உதவியோடு மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்கவும் பணியாற்றி வந்துள்ளனர். கட்டிடம் இடிந்தபோது அப்பள்ளிக்கூடத்தில் மாணவர்களும் ஆசிரியர்களுமாக சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. E

விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச வேண்டும்: கருணாநிதி

சென்னை: போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மறுபடியும் அஜீத் தாதா!

மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத். அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார். ரெட் படத்தில் மிரட்டல் தாதாவாக நடித்துக் கலக்கினார். சமீபத்தில் வெளியான பில்லா படத்தில் படா தாதாவாக பட்டையைக் கிளப்பினார். இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவுள்ள சுராங்கனி படத்திலும் தாதா வேடம் போடுகிறாராம். இப்படத்தை இயக்கவிருப்பது கெளதம் மேனன். சிவாஜி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்துக்கான டிஸ்கஷனை கெளதம் மேனன் ...

கன்னடத்தில் நமீதாவுக்கு கிராக்கி

நமீதா நடித்த தமிழ்ப் படங்களுக்கு கர்நாடகத்தில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். எல்லாம் அவர் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடித்த பிரமாண்டம் படத்தில் காட்டிய கவர்ச்சியால் வந்த வினைதான்.

35 வெளிநாட்டுப் பைலட்டுகளை நீக்கிய ஜெட்!

மும்பை: தனது நிறுவனத்தைச் சேர்ந்த 35 பைலட்டுகளை நீக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இவர்கள் அனைவரும் ஜெட் ஏர்வேஸின் போயிங் - 737 விமானத்தை இயக்கி வந்த வெளிநாட்டுப் பைலட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்ததாலும், விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாலும் தனியார் விமான நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் உள்ளன. செலவைக் குறைக்க ஊழியர் குறைப்பு உள்பட பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. புதிய விமான நிலையக் ...

382 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி

நாக்பூர்: நாக்பூர் டெஸ்ட் போட்டியி்ல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி, 98 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னிலை வலுவாகியுள்ளது.

வவுனியா தோணி;க்கல் பகுதியில் டியூட்டரியில் குண்டுவெடிப்பு ஒருவர் பலி

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் நேற்றிரவு பத்து மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டை பொருத்திக் கொண்டிருந்தவேளையில் வெடித்திருக்கலாமென்ற சந்தேகம் நிலவுவதாக வவுனியா பொலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பின்போது வீதியில் தூக்கி வீசப்பட்டிருந்த சடலத்தின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டே இந்த சந்தேகம் நிலவியுள்ளது. சம்பவத்தில் இறந்தவர் திணைக்களமொன்றின் சாரதியாக பணியாற்றி வந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டுள்ளனர். சடலம் மீட்கப்பட்டு வவுனியா [...]

மின்சாரம் தாக்கி கிண்ணியாவில் இரு பெண்கள் மரணம்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்கேணி கிராமத்தில் உயர்வலு மின்சாரம் தாக்கியதால் இரு கால்களையும் இழந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். இப்பெண்ணின் தாயாரும் இதே போன்று மின்சாரம் தாக்கியதால் ஒரு கையை இழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி மரணமடைந்தார். ஆலங்கேணி கிராமத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின்கம்பங்களை நிறுத்தி உயர்வலு மின்சாரக் கம்பிகளைக் கொண்டு செல்வதன் காரணமாகவே இத்துக்ககரமான [...]

மத்திய அரசின் இணக்கத்துடன் உணவுப்பொருட்கள் விநியோகம்

இந்திய மத்திய அரசுடன் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாகவே, இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் வன்னி மக்களுக்கு விநியோகிக்கப்படுமென ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச எம்.பி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் ஏற்பாடுகளை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழநாட்டின் சென்னை துறைமுகத்திலிருந்து 2ஆயிரம் மெற்றிக்தொன் உணவுப் பொருட்களைக் கொண்ட கப்பல் இன்று அல்லது நாளை கொழும்பை வந்தடையுமென கூறப்பட்டுள்ளது. 15கிலோ அரிசி, 02கிலோ பருப்பு, [...]

உரலுக்குகள் கிளைமோர் கொண்டுவந்தவர் ஓமந்தையில் கைது, கிளைமோர் செயலிழப்பு

அதிசக்தி வாய்ந்த இரு கிளேமோர் குண்டுகளையும், அதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் மரத்தால் செய்யப்பட்ட உரலில் மறைத்து தந்திரமாக தென்பகுதிக்கு கொண்டுவர முற்பட்ட ஒருவரை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து நேற்று முன்தினம் பிற்பகல் 3.30மணியளவில் மடக்கிப் பிடிக்கப்பட்ட குறித்த நபரிடமிருந்த குண்டு பொருத்தப்பட்ட உரலையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வவுனியா ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக நேற்று பிற்பகல் குறித்த நபர் [...]

ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் சகல தரப்பினருக்கும் நிவாரணம் - அலவி மௌலானா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டம் சகல தரப்பினருக்கும் நிவாரணங்களை வழங்குவதாக அமைந்தள்ளதென தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி தெரிவித்துள்ளது. அரச ஊழியர்கள், தொழிலாளர்கள் உட்பட சாதாரண வர்க்கத்தினருக்கு பொதுவான சிறந்ததொரு வரவு செலவு திட்டமென தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் ஏற்பாட்டாளரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மௌலானா நேற்றுத் தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு சிறந்த வரவுசெலவு திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்மொழிந்தமைக்காக தொழிலாளர் வர்க்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். உலக [...]

மலைய தோட்டங்கள் தனியாருக்கு வழங்கப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதியளிப்பு

அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் மலையக பெருந்தோட்டங்களை தனியாருக்கு வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தூதுக்குழுவினருடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக காங்கிரசின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். கண்டி பன்விலை ரங்கலை பகுதிகளில் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றால் நிர்வகிக்கப்படும் 28தோட்டங்களின் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான து}துக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து [...]

அரசியல் தீர்வு திட்டத்தை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை வெகுவிரைவில் தயாரித்து முடித்த ஜனாதிபதியிடம் கையளிக்க முடியுமென நம்பிக்கை கொண்டுள்ளதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கடந்தவாரமும் இருதடவை கூடி ஆராய்ந்ததாக கூறிய பேராசிரியர், 90வீதத்திற்கும் அதிகமான விடயங்கள் தொடர்பில் கட்சிகளுக்கிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தீர்வு திட்டத்தை விரைவில் தயாரித்து நிறைவு செய்யக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் தீர்வுப் பொதியை இவ்வாறும் ஜனாதிபதியிடம் கையளிப்பது சாத்தியமாகாதென்று தெரிவித்த [...]

புதுக்கோட்டை: இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை: இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

பொதுத்தேர்தலில் நியூசிலாந்து பிரதமர் தோல்வி

நியூசிலாந்து நாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் தான் தோல்வியடைந்ததை, அந்த நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் ஹெலன் கிளார்க் அவர்கள் ஒப்புக்கொண்டார். பிரதமராக நான்காவது பதவிக்காலத்துக்கு தேர்வாவதில் தோற்றதை அடுத்து அவர் தனது தொழில்கட்சி தலைமைப் பதவியையும் இராஜனாமா செய்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்னர், முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு நுழைந்த, முன்னாள் முதலீட்டு வங்கியாளரான, மையவாத வலதுசாரி தேசியக் கட்சியின் ஜோண் கீ அவர்கள் பிரதமராக பதவியேற்பார். ஹெலன் கிளார்க் அவர்கள் பிரதமராக இருந்த காலப்பகுதியில் [...]

தக்சின் சின்னவத்ராவின் பிரித்தானியாவிற்கான விசா ரத்து

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சின் சின்னவத்ரா மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பிரிட்டனுக்கான விசாவை ரத்துச் செய்துள்ள பிரித்தானிய அரசாங்கம், அவர்களை எந்த விமானமும் பிரித்தானியாவிற்கு ஏற்றிவரக்ககூடாது என்று விமான நிறுவனங்களை கேட்டுள்ளது. இந்த விசா ரத்தான தகவல் மின்னஞ்சல்கள் மூலம் பாங்கொக்கில் உள்ள விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விசா ரத்தானதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்று தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு சதிப்புரட்சி [...]

நீதியரசர்களின் சம்பளம் கொடுப்பனவு அதிகரிப்பு

உச்சநீதிமன்ற நீதியரசர்களினதும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களினதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவு என்பவற்றை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2007ஜூலை முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. நீதியரசர்களின் சம்பள மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் பிரதம நீதியரசரின் சம்பளம் எழுபதாயிரம் ரூபாவாகவும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களினதும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரினதும் சம்பளம் அறுபத்தையாயிரம் ரூபாவாகவும் மேன்முறையீட்டு நீதிபதிகளின் சம்பளம் 63.500ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளன. இதேவேளை [...]

இராணுவத்தளபதி அடங்கலான குழுவின் வன்னி விஜயம்

வன்னியின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் படை நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இராணுவத்தளபதி லெப்டினென்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான சிரேஸ்ட உயர் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அங்கு விஜயம் செய்துள்ளது. கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தை சென்றடைந்த இராணுவத்தளபதி தலைமையிலான குழுவினரை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்றுள்ளார். பாதுகாப்பு நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தபின் இராணுவத்தளபதி வன்னி [...]

Syndicate content