Vizhoppu Headlines

வெளிநாட்டு கொள்கையில் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஒபாமா சரி செய்வார் என்கிறார் மாஜி அதிபர் கிளின்டன்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை விவகாரங்களில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பாதிப்பை பராக் ஒபாமா சரி செய்வார் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில், ஒபாமா போட்டியிட உள்ளார். அவருக்கு, முன்னாள் அதிபர் பில் கிளின்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

read more

கதிர்காமத்தில் பல் கலாசார, பல் சமய நூதனசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு

கதிர்காமத்தில் தகவல் மத்திய நிலையம், மற்றும் பல் கலாசார, பல் சமய நூதனசாலை என்பவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

read more

ஒபாமா அவசியம் அமெரிக்காவின் அதிபராக வேண்டும்: ஹிலாரி கிளின்ரன் ஆதரவு

ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக தனக்கு எதிராக போட்டியிட்ட ஒபாமாவுக்கு, தனது பரிபூரண முழு ஆதரவை தெரிவித்துள்ளார் ஹிலாரி. "ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஒபாமா தான் எனது வேட்பாளர். அவர் அவசியம் நமது அதிபராக வேண்டும்' என்று ஹிலாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

read more

கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் மற்றும் பிரித்தானிய தூதுவராலய உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு.

மேற்படி சந்திப்பானது திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (26-08-08)பிற்பகல் 2.45 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணசபையைப் பொறுப்பேற்றதிலிருந்து இடம் பெறுகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

read more

நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற மாநாட்டில் பிரஜா ராஜ்யம் என்ற புதுக்கட்சியை துவக்கினார் நடிகர் சிரஞ்சீவி. கூட்டத்தில் அவர் கூறியதாவது : தான் மக்களின் வலி மற்றும் உ<ணர்வுகளை அறிந்தவன் , மக்கள் தங்களின் ஆதரவை தனக்கு நல்கிட வேண்டும், தங்களின் ஆதரவு இன்றி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

read more

இராணுவ முன்நகர்வினால் பயங்கரவாதிகள் தமது இறுதிக்காலத்தை நெருங்கியுள்ளனர் - பிரதமர்

இராணுவத்தினரின் முன்நகர்வின் காரணமாக பயங்கரவாதிகள் தமது இறுதிக்காலத்தை நெருங்கியுள்ளதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் படைவீரர்களுக்கு கௌரமளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

read more

பிரமாண்ட ஏற்பாடுகளுடன் மீண்டுமொரு நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றார்.

நடிகர் சிரஞ்சீவி இன்று புதிய கட்சி துவக்குவதையொட்டி, அதற்கான மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

read more

முதலமைச்சர் தலைமையில் துரித விவசாய அபிவிருத்திக்கான மீளாய்வுக் கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை துரித அபிவிருத்தி செய்கின்ற முதலமைச்சரின் கொள்கைத் திட்டத்திற்கு இணங்க மாகாணத்தின் சகல பிரதேசப் பிரிவுகளிலும் மேற்படி கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் கடந்தவாரம் வவுணதீவு, பட்டிப்பளை ஆகிய பிரதேச பிரிவுகளில் மேற்படி கூட்டங்கள் இடம்பெற்றன.

read more

கிழக்கு பல்கலைக்கழகமான வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவர்களுக்கு தெற்குப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்க

வந்தாறுமூலை பல்கலைக் கழகத்தில் கல்விபயின்ற சிங்கள மாணவர்களில் ஒருவர் பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகளால் கடந்த 21 ந் திகதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

read more

ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.ஸ்ராலின் தலைமையில் இன நல்லுறவுப் பணியகம் ஆரம்பம்.

எக்ஸில் சஞ்சிகையின் ஆசிரியரும் புகலிட இலக்கிய அரசியல் சூழலில் மாற்றுக்கருத்துக்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நீண்டகாலமாக குரல் கொடுத்துவந்த ஸ்ராலின் அவர்கள் நேற்று (24.08.2008) கிழக்கு மாகாணசபையின் இனநல்லுறவுப் பணியகப் பணிப்பாளராக பொறுப்பினை ஏற்றார்.

read more

தேர்தல் வெற்றி படையினரின் முயற்சிக்கு கிடைத்த உந்து சக்தி - ஜனாதிபதி மஹிந்த அறிக்கை

வட மத்திய சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி பயங்கரவாதத்தை அழித்தொழித்து நாட்டை பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு கிடைத்த உந்து சக்தியாகும். தாய் நாட்டின் மீது அன்பு கொண்ட மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜ தெரிவித்துள்ளார்.

read more

தேர்தல் வெற்றி படையினரின் முயற்சிக்கு கிடைத்த உந்து சக்தி - ஜனாதிபதி மஹிந்த அறிக்கை

வட மத்திய சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி பயங்கரவாதத்தை அழித்தொழித்து நாட்டை பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு கிடைத்த உந்து சக்தியாகும். தாய் நாட்டின் மீது அன்பு கொண்ட மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜ தெரிவித்துள்ளார்.

read more

பிரமாண்டமாக நடந்த ஒலிம்பிக் நிறைவு விழா விடைபெற்றது பீஜிங்

பீஜிங் ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. சீன பாரம்பரியத்தை விளக்கும் கலைநிகழ்ச்சிகள், கண்கவர் வாணவேடிக்கை, அதிர வைக்கும் "லேசர் \ அடுத்த ஒலிம்பிக்கை நினைவுபடுத்தும் லண்டன் சாகசங்கள் என நிறைவு விழா நிகழ்ச்சிகள் அட்டகாசமாக நடந்தன.சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்தது.

கிர்கிஸ்தான் விமானம் நொறுங்கி விழுந்தது 100 பேர் பலியாயினர்

கிர்கிஸ்தான் நாட்டில் 120 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்ததில் 100 பேர் பலியாயினர்; 20 பேர் உயிர் பிழைத்தனர்.கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விமான கம்பெனி போயிங்-737 விமானம் ஒன்று நேற்று பைஷக் விமான நிலையத்திலிருந்து, 120 பயணிகளுடன் ஈரான் நாட்டுக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நொடிகளில் நொறுங்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

read more

86 மனைவிகள், 170 குழந்தைகள் நைஜீரிய முதியவரின் 'சாதனை'

84 வயது முதியவர், மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம். ஷரியத் சட்டப்படி, நான்குக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கென்யாவில் மரண தண்டனை விதிக்கப்படும்.

read more

குடிம்பிமலை, புலிபாய்ந்தகல் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தி காண இருக்கின்றது.

பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலியின் கொலைவெறிக்கு பலியாக்கப்பட்ட கிழக்கின் மைந்தர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பிரதான பணியாக கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை துரித அபிவிருத்தி செய்கின்ற முதலமைச்சரின் கொள்கைத் திட்டத்திற்கு இணங்க மாகாணத்தின் சகல பிரதேசப் பிரிவுகளிலும் மேற்படி கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

read more

பெரியமேடு லாட்ஜில் சிக்கினார் போதை பொருள் கடத்திய புலிப்பயங்கரவாதி கைது?

சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் இருந்து இலங்கைக்கு மர்ம நபர் ஒருவர் போதை பொருட்கள் கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள விடுதியில் போதை பொருள் போலீஸ் சூப்பிரண்டு டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையிலான தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர்.

read more

நேற்றைய தினம் இடம்பெற்ற வட மத்திய மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்

அநுராதபுரத்தினை தலைநகராகக்கொண்ட வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்

1 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஆளும்கட்சி) 307.457 வாக்குகள், பெற்ற வாக்கு விகிதம் 56.37% பெற்ற உறுப்பினர் எண்ணிக்கை இரு போனஸ் ஆசனங்கள் உட்பட(20)

2 ஐக்கிய தேசியக் கட்சி (எதிர்கட்சி) 205.284 வாக்குகள், பெற்ற வாக்கு விகிதம் 37.64% உறுப்பினரின் எண்ணிக்கை (12)

3 மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) வாக்குகள், 26.738 பெற்ற வாக்கு விகிதம் 4.90% பெற்ற உறுப்பினர் (1)

முஸ்லிம் அமைச்சர்கள்மீது பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகள் கிரனைட் தாக்குதல்

கடந்த இரவு 11-30 மணியளவில் பொல்லனறுவை மாவட்டத்தின் கதுருவெல நிலும்வில என்னும் பிரதேசத்தில்வைத்து அமைச்சரான அமீர் அலி மற்றும் உதவி அமைச்சர் ஹசன் பைலா ஆகியோர்மீது பயங்கரவாதிகள் கைக்குண்டுவீசி தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வன்முறைகளை மேற்கொள்ளும் அரசுக்கு தகுந்த பாடத்தினை நாம் கற்பிப்போம் - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

வன்முறையினதும், பயங்கரவாதத்தினதும் சர்வதேச மன்னர்களான பாஸிஸப் புலிகளின் பங்காளியான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் பயங்கரவாத ஒழிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் சவால் விடுத்துள்ளார்.

read more

என் கவர்ச்சி ஓவர்டோஸாவா இருக்கு? நமீதா

முன்னாள் ஹீரோயின் குஷ்புவுக்குப் பிறகு இந்நாள் ஹீரோயின் நமீதாவுக்கு கோவில் கட்டி மகிழ்ந்துள்ள சினிமா பைத்தியங்களைப் பற்றி அதில் குடியிருக்கப்போகும் அவர்களுடைய கடவுளிடமே கேட்டோம்.

read more

தலைமறைவாக இருந்து லண்டனை மிரட்டும் 1 1/4 லட்சம் ரவுடிகள்

சமீப காலமாக இங்கிலாந்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு இனம் புரியாத புதிய பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் உள்துறை செயலாளர் ஒரு அதிர்ச்சி கரமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் கொடூரமான 1 லட்சத்து 30 ஆயிரம் ரவுடிகள் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் பலர் மிகப் பெரிய கொலை குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா தனது மனைவி மைக்கேலி மற்றும் மகள்களுடன் சிகாகோவில் பிரசாரம் செய்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த காட்சி.

read more

7 கோடி நஷ்டயீடு வழங்குவதாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரஜினி உறுதி

ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாகிய குசேலன் திரைப்படம் நன்றாக ஓடாததால் தங்களுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

read more

புலிப்பயங்கரவாதிகளுக்கு தமிழகம் வேலூரிலிருந்து டீசல் கடத்தல்? பொலிஸார் தீவிர சோதனை

வேலூர் மாவட்டத்தில் இருந்து புலிப்பயங்கரவாதிகளுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பங்க்கில் கேட்டால், "கையிருப்பு இல்லை என்றும், வந்த சில மணி நேரங்களில் விற்பனையாகி விடுவதாகவும்' தெரிவிக்கப்பட்டது.